திருமணப் பொருத்தம் பார்கும்போது பெண் ராசிக்கு இரண்டாவது ராசியாக ஆண் ராசி அமைந்து, அந்த ராசியானது கடகம், விருச்சிகம், மீன ராசியாக அமைந்தால், தம்பதிகளுக்கு பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்படும். எனவே இத்தகைய ஜாதகங்களை இணைக்காமல் இருப்பதுதான் சிறப்பு, அதுபோன்று சுப முகூர்த்தங்கள்- அதாவது திருமணம், கிரகப்பிரவேசம் மற்றும் சுப காரியங்களை பத்திரைக் கரணத்தில் வைக்காமல் இருப்பதுதான் சிறப்பு. பத்திரைக் கரணத்தில் சுபகாரியங்கள் செய்தால் பொருளாதார இழப்பு, கண் வியாதிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisment

அதிஷ்ட ராசிக் கல்லைத் தேர்வு செய்யும்போது லக்னத்திற்கு 9-ஆம் வீட்டின் அதிபதியின் கல்லைத் தேர்வு செய்வது நலம். உங்கள் லக்ன வீட்டின் அதிபதியாகிய கிரகத்தின் வடிவங்களை மோதிரமாகப் பொறித்து கைகளில் அணிந்துகொள்ளுங்கள். இது உங்கள் எதிரிகளை வெல்வதற்கு ஏற்ற பரிகாரமாகும்.

புதிதாக தங்கத்தை வாங்கும்போது குருபகவான் தனது சொந்த ராசியில் அல்லது உச்ச ராசியில், தனது நட்பு ராசியில் அமரும்போது, அந்த ராசியை லக்னமாகக்கொண்டு தங்கம் வாங்கினீர்கள் என்றால் தங்கம் பெருகும்.

ss

Advertisment

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத் திற்கு 7-ல் அல்லது 8-ல் பாவகிரகம் இருக்கிறதென்றால் களத்திர தோஷ மென்று அச்சப்படாதீர். அந்த கிரகத்தை ஒரு பாவகிரகம் பார்க்க, அங்கே இருக்கும் கிரகமானது பாவ கிரகங்களின் வர்க்கங்களில் இருந்தால் மட்டும்தான் அவை களத்திர தோஷத்தை ஏற்படுத்தும். மாறாக ஏழு அல்லது எட்டில் அமர்ந்த பாவ கிரகமானது சுப கிரகங்களின் ஷட்வர்க்கங்களைப் பெற்றால் அவை களத்திர தோஷத்தை ஏற்படுத்துவதில்லை. அவ்வாறே ஒன்பதாம் வீட்டில் வலுவான சுப கிரகம் இருந்தாலும் களத்திர தோஷம் ஏற்படாது.

உங்கள் ஜாதகத்தில் களத்திர தோஷம் இருக்கின்றதென்று அச்சுறுத்துகிறார்களா? அச்சமடையாதீர். சாவித்திரி விரதம் மேற்கொண்டு வாருங்கள். களத்திர தோஷம் விலகியோடும்.

அதுபோன்று ஜாதகத்தில் புத்திர தோஷம் இருக்கின்றதென்று அச்சப் படுகிறீர்களா? சந்தான கோபாலகிருஷ்ண மந்திரம் சொல்லி கிருஷ்ணனை வணங்கிவாருங்கள்.

Advertisment

அதுபோன்று செவ்வாய்க்கிழமை உபவாசமிருந்து விரதம் மேற்கொள்ளுங் கள். எல்லாவிதமான புத்திர தோஷங் களும் விலகிவிடுவதாக சாஸ்திரம் கூறுகிறது.

தம்பதிகளைத் திருமணத்திற்காக இணைக்கும்போது, ஆண் ராசியிலிருந்து ஐந்தாவது ராசியாகப் பெண் ராசி அமைந்து, அது அற்ப புத்திரர் ராசியான ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிக மாக அமைந்து, இருவருக்கும் யோனிப் பொருத்தம் அமையாதிருக்க, குழந்தைச் செல்வம் கிடைப்பது கடினமாகும்.

குழந்தைகள் ஜாதகத்தில் லக்ன வீட்டோன் 2-ல் அமர்ந்து பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டால் அல்லது லக்ன வீட்டோன் வலுக்குன்றி 2-ல் அமர்ந்தால் அந்தக் குழந்தை பொய்பேசும் குணம்கொண்டதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. இதற்குப் பரிகாரமாக 2-ல் இருக்கும் பாவகிரகம் அல்லது வலுக்குன்றி 2-ல் அமர்ந்த லக்ன வீட்டுக் குடைய கிரக வாரங்களில் நெய்தீபமேற்றி, அந்த கிரக அதிதேவதையைத் தொடர்ந்து வணங்கிவாருங்கள்; குழந்தை பொய்பேசுவதை விட்டுவிடும்.

மேஷ ராசி, மகர ராசியினருக்கே மூட்டுவலி அதிகமாக பாதிப்பைத் தரும்; கவனம் தேவை, துலா ராசி அல்லது துலா லக்னத்தினருக்கு இரண்டு பெயர் அமையும். குரு, சுக்கிரன் கேந்திரங்களில் அமைந்த ஜாதகர் கல்வியில் சிறப்புப் பெற்று விளங்குவார். சச யோகம் பெற்ற ஜாதகர் அன்னை யிடம் பக்திகொண்டு விளங்குவார். சிம்ம லக்னம், சிம்ம ராசியினரும் தாயின்மீது அன்புகொண்டு விளங்குவர். உங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் ராகு அமர்ந்துள்ளார் என்றால், உங்கள் தாயாரை அன்போடு கவனித்துக் கொள்ளுங்கள். அவரை கவனிக்காதபோது உங்களுக்கு தாய்சாபம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனை "வீம கவி' என்னும் தமிழ்நூல் சொல்கிறது.

மங்கையர் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாம் வீட்டில் சந்திரன் அமர்ந் திருந்தால் அவர் வருங்காலத்தில் கணவரால் கொடுமைப்படுத்தப்படுவர். பரிகாரமாக சோமவார விரதமிருந்து, திங்கள்கிழமை நெய் தீபமேற்றி, ஐக்யமத்யஸூக்த மந்திரத்தால் பிள்ளையாருக்கு அர்சனை செய்து வருவது நன்மையையும் கணவன்- மனைவியிடையேயும் ஒற்றுமையை வழங்கும்.

செல்: 94438 08596